பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இ அ.ச. ஞானசம்பந்தன் அழகில் ஈடுபடுவது கண்ணுக்கு உரியதுதான். ஆனால் அந்த ஈடுபாட்டின் காரணமாகக் கண்ணாகிய பொறிக்கு ஒரு நலன் விளையவேண்டும். அதன் பின்னேயுள்ள மனத்தில் ஒரு மகிழ்ச்சியும் தோன்றவேண்டும். இவை இரண்டும் நடைபெறும் பொழுதே காணப்பட்ட பொருளின் அழகு குறையத் தொடங்கி இறுதியில் அழகை இழந்த அப்பொருள் அழியவும் கூடும். அழகிழந்த பொருளைக் கண்ட கண் அழகைக் காணாமையால் அதனைத் தேட முயல் கிறது. அதன் பயனாக மனத்திடைத் துயரம் வருகிறது. இந்த நிலையில் அறிவு தொழிற்பட வேண்டும். உலகிடை எந்தப் பொருளிடத்துமுள்ள எந்த அழகும் தோன்றி, நின்று, அழியும் இயல்புடையன என்பதை மனத்திற்கு உணர்த்த வேண்டும். அதை உணர்ந்த மனம் கண்ணாகிய பொறிக்கு இச் செய்தியை அறிவிக்க வேண்டும். ஆனாலும் என்ன ! காணாமற் போய்விட்ட அந்த அழகையே கட்பொறி தேடிக்கொண்டு நிற்கிறது. அறிவின் முயற்சி பலிக்கவில்லை. இப்பொழுது சித்தத்தில் தோன்றிய உள்ளுணர்வு வேலைசெய்யத் தொடங்குகிறது. தன் கூட்டாளியாகிய மனத்தை மெள்ளமெள்ளத் திருப்புகிறது: “மனமே! நீ ஏன் மகிழ்ச்சியை இழக்க வேண்டும்? பொருளிடத்துள்ள அழகைக் கண்ணானது கண்டு உனக்கு அறிவுறுத்தி யமையால்தானே நீ அப்போது மகிழ்ச்சியடைந்தாய்! இப்போது அவ்வழகு அழிந்துவிட்டது என்று கண் வருந்தி நிற்க அதனால் நீயும் வருத்தமடைகிறாய். இப்பொழுது நான் சொல்வதைக் கேள். உனது