பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 87 பங்காளிகளான கண், செவி, மூக்கு, நா முதலிய பொறிகள் தோன்றி மறையும் அழகில், இன்பத்தில் ஈடுபடுகின்ற வரையில் இந்தப் பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும். தோன்றும்போது இன்ப மும், அழியும் பொழுது துன்பமும் வராமல் இருக்க ஒரேயொரு வழியுண்டு. அழியா அழகு ஒர் இடத்தில் உண்டு. அதனைப் பார்க்குமாறு கண்ணை நீ ஏவி விட்டால் பிறகு அந்தக் கட்பொறி அதைவிட்டு வேறிடத்திற்கு மாறவேண்டிய தேவையே ஏற்படாது. இனிய இசை, பிறர் கூறும் புகழ்மொழி என்பவற்றைக் கேட்டுச் செவியாகிய பொறியும் நீயும் மகிழ்ந்தீர்கள். இப்பொழுது இசை, வசையாகிவிட்டது அல்லது நின்று போயிற்று. புகழ், இகழாகிவிட்டது அல்லது நின்று போயிற்று. இந்த நிலையில் ஒரேயொரு பொருளைப் பற்றி எவ்வளவு புகழ்பாடினாலும் அலுக்காமல், சலிக்காமல் நீ கேட்கலாம் அப்படி யொரு பொருளுண்டா என்று கேட்கிறாயா? "இறைவன் என்ற பொருள்தான் அழியா அழகுடையது. எத்தனை பிறவிகளில் அதன் புகழைப் பாடினாலும் அது முடிவடையாது. இது கருதியே 'நின்னளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமை’ (திருமுரு:278) என்று நக்கீரன் என்ற புலவன் பாடிச் சென்றான். "ஆக உன் வசத்திலுள்ள ஐந்து பொறிகளும் அவற்றைப் பற்றுக் கோடான ஐந்து புலன்களும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அவன்பால் செலுத்தப்படக் கூடுமாயின் அவையும் இன்பமடையும், நீயும் இன்ப மடைவாய், யானும் வளர்ச்சியடைவேன்.”