பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒ அ.ச. ஞானசம்பந்தன் இப்பொறிகள் தத்தமக்குரிய வழிமுறை இதுதான் என்று அறிந்து இவ்வழிமுறைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இப்பொறிகளைக் கோள்இல் (பற்ற வேண்டிய வற்றைப் பற்றாத பொறிகள் என்றே கூறவேண்டும். தாம் பற்ற வேண்டியவற்றைப் பற்றாத பொறிகள் உருவ மாத்திரையாய் வடிவ மாத்திரையாய்க் கண், காது, மூக்கு என்றிருக்குமே தவிர அவற்றால் அவற் றிற்கும் பிறருக்கும் பயனொன்றுமில்லை என்ற இக் கருத்தையே கோள் இல் பொறியில் குணமிலவே' என்றார். ஐம்பொறிகளும் மிக அழகாக வடிவுபெற்றிருப் பினும் தமக்கும் பிறருக்கும் எவ்விதப் பயனையும் விளைவிக்காமல் இருந்தால் அவை பொம்மை (பாவை) போல அமைந்துவிடும். இதேபோலப் பயனற்ற மற்றோர் உறுப்பும் உண்டு. அந்த உறுப்புக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஐம்பொறிகள் என்று சொல்லப்படும் இக்கருவிகள் அந்த ஒற்றை உறுப் பினுள்ளேயே அடங்கியிருக்கின்றன. இப் பொறி களைத் திருத்தி நல்வழிச் செலுத்த வேண்டிய அறிவு என்ற ஒன்றும் அந்த ஒற்றை உறுப்பினுள்ளேயே அடங்கியுள்ளது. அதுதான் தலை என்ற உறுப்பாகும். அப்படியானால் இந்தத் தலை என்ன செய்ய வேண்டும்? அந்த ஐந்து பொறிகள் செய்யவேண்டிய பணிக்கு அப்பாலும் ஒரு பணியுண்டு. அதுவே அப் பொறிகளுக்குக் கொள் பொருளாகவுள்ள இறைவ னாகும். இவ்வைந்து பொறிகளும் இறைவனிடத்துத் தனித்தனியே தம் பணிகளைச் செய்யவேண்டும்.