பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் 89 ஆனால் தலையைப் பொறுத்தமட்டில் அறிவு என்பது தோன்றி வளர்ந்து தேவையில்லாத அகங்காரம், மமகாரம் என்ற இரண்டையும் வளர்த்துக் கொண்டு நிற்கிறது. இப் பொறிகளை திருத்தி நல்வழிப்படுத்து வதைவிட மிக இன்றியமையாத ஒரு பணி என்ன வென்றால் இந்த அகங்கார மமகாரங்களை அடக்குவ தாகும். அதற்கும் ஒரு வழியுண்டு. இந்த அகங்காரம், மமகாரம், அறிவு என்பவை குடிகொண்டிருக்கும் தலையை இறைவனுடைய தாளில் சாய்த்துக் கிடத்தி அறிவை, உணர்வை அவன் மாட்டுச் செலுத்தத் தொடங்கினால் ஒரே நேரத்தில் எல்லா வேலையும் முடிந்துவிடும். அதாவது பொறிகள், தாம் செய்ய வேண்டிய செயலைக் - கொள்ளுகின்ற (பற்றுகின்ற) செயலைச்-செய்வதால் கோள் இல் பொறியாக இல்லாமல் கோள் உள் பொறியாக மாறிவிடும். தாளை வணங்கிய தலையும் அகங்கார மமகாரங் களை இழந்து பிறந்த பயனைப் பெறும். இப்பாடலில் வரும் எண்குணத்தான் என்ற தொடருக்குப் பலரும் பல்வேறு விதமாகப் பொருள் கூறியுள்ளனர். சைவ ஆகமங்களில் கூறப்பெற்றுள்ள தாகிய எட்டுக் குணங்களை எடுத்துக்காட்டுகிறார் பரிமேலழகர். அவையாவன தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்பனவாம். இவற்றில் முதலிரண்டும் நம் சிந்தனைக் குரியவை. அவன் ஒருவனே பொருள், அவனையன்றி