பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இ. 5.|9ےF. ஞானசம்பந்தன் வேறு ஒரு பொருள் இல்லை என்று இறையிலக்கணம் கூறிவிட்டுத் திடீரென்று தன்வயத்தனாதல் என்றால் என்ன பொருள்? தன்னையன்றிப் பிற ஒன்றும் இல்லையென்றால் பிறவயத்தனாதல் இல்லை யென்பது விளங்கும். எனவே தன்வயத்தனாதல் என்பது சிறந்தமுறையில் பொருள்கொள்ள முடியாத தொடராகவுள்ளது. உடம்பு என்ற சொல்லுக்குத்துால, சூக்கும உடல்கள் என்பவற்றுள் எதை வைத்துக் கொண்டாலும் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு உடம்பு இருப்பதாகக் கருதித் துரய உடம்பினனாக உள்ளான் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமற்றது என்பது விளங்கும். சிறந்த சைவ சித்தாந்தியான தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூட இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஜைன, பெளத்தர்கள் எண்குணம் என்பதற்குப் பின்வருமாறு உரைகடறியுள்ளனர். அனந்தஞானம், அனந்தவீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, அவ்ாவின்மை, அழியாவியல்பு என்பன அவ்வெண்குணங்களாம். பரிமேலழகர் உரையைவிடப் பரிதியார்கூறும் இந்த உரை சிறப்புடையதாகத் தெரிகிறது. என்றாலும் இவ்வெட்டனுள் அனந்த குணம் என்ற ஒன்றும், கோத்திரமின்மை என்ற ஒன்றும் சிந்திக்கத் துண்டு கின்றன. மகாவீரர் முதல் புத்தர் வரையில் ஜைனம், பெளத்தம் ஆகிய இரு சமயங்களையும் தோற்றுவித்த இப்பெருமக்கள் இருவரும் மானுட உடம்புடன் பிறந்து இப்பிறவியிலேயே அனந்த ஞானம் முதலிய வற்றைப் பெற்றனர் என்பது உண்மை.