பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 9 மனிதர்களாகப் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக யாரேனும் இவர்களுக்குக் கோத்திரம் கற்பிக்கத் தொடங்கினால் அது பொருந் தாமற் போய்விடும். எனவே கோத்திரமின்மை என்று கூறியது பொருத்தமேயாகும். ஆனாலும் எண்குணம் என்ற சொல்லுக்கு எட்டுக் குணங்கள் என்று பொருள் கூறிவிட்டு அந்த எட்டு என்ன என்று விவரிக்கும் போதும் 'அனந்த குணம்’ என்று சொல்வது பொருத்தமா என்று சிந்திக்க வேண்டும். எண்குணம் என்ற சொல்லுக்கு எட்டு என்று பொருள் கொள்வதால் எதிர்வரும் சிக்கல்களாகும் இவை. எனவே தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 'எண்' என்பதற்கு எண்ணத்தகுந்த' என்று பொருள் கூறியது பொருத்தமாகவே உள்ளது. ஒரு நாமம் ஒர் உருவம் என்றும் இலார்க்கு ஆயிரம் திருநாமம் (திருவாச:235) பாடுவதுபோலக் குணங்களைக் கடந்துநிற்கின்ற ஒரு பொருளுக்குப் பல குணங்களைக் கற்பித்து மனநிறைவு அடைதல் உயிர்கட்கு இயற்கையாதலின் எண்குணம் என்ற சொல்லுக்கு எண்ணப்படுகின்ற குணங்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (10) இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர், இறைவனடியைச் சேராதவர்கள் பிறவிக் கடலை நீந்தமாட்டார்கள் என்பது பாடலின் திரண்ட பொருளாகும்.