பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இ. அ.ச. ஞானசம்பந்தன் இறைவனடியைச் சேராதார் பிறவிப் பெருங் கடல் நீந்தார் என்றுமட்டும் ஆசிரியர் கூறியிருத்தலின், பிறவிப் பெருங்கடல் நீந்துபவர் யார் என்ற வினா விற்கு விடைகூறுமுகமாக இறைவனடி சேர்ந்தார்’ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. இந்தப் பத்துக் குறள்களிலும் இறைவன் என்ற சொல் இருமுறை பயன்படுத்தப்படுகிறது. பிறவியைக் கடல் என இருமுறை பேசப்பெறுகிறது. х பிறவியைக் கடலென உருவகிக்க வேண்டிய தேவை என்ன? பிறவிக்காடு என்றுகூட மணிவாசகர் பேசுகிறார். ஆனால் வள்ளுவப் பெருந்தகை மணி வாசகருக்கு எட்டு நூற்றாண்டுகள் முற்பட்டவ ராதலின் பிறவியைக் கடல் என்றே இருமுறையும் உருவகம் செய்கிறார். இது ஏன் என்ற வினாவை எழுப்பிக் கொண்டால் சில விளக்கங்கள் கிடைக் கின்றன. மனிதன் தோன்றிய தொடக்க காலத்தி லிருந்து மனிதனுக்கு மிக அச்சத்தையுண்டாக்கும் பொருள்களில் கடல் முதலிடம் வகித்தது. படகு, புணை என்ற எதனையும் அறியாத அந்த ஆதி மனித னுக்கு எதிர்க்கரை தென்படாத கடல் பெரும் அச்சத்தை உண்டாக்கியதில் வியப்பொன்றும் இல்லை. காலம் உருண்டு ஒடுகிறது. மனிதன் நாகரிகத்தில் வளர்ந்துவிட்டான். படகையும், கப்பலையும் செய்து கொண்டு கடலிடைப் பயணம் செய்யக் கற்று விட்டான். பொருள்தேடவும், வாழ்க்கையை வளப் படுத்திக் கொள்ளவும் கடல் பேருதவி புரிகின்றது என்பதைப் பழங்கால மனிதன் நன்கு புரிந்து கொண்டான்.