பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 93 எவ்வளவுதான் மனிதனுடைய வாழ்க்கை உயர கப்பலும் கடல் வாணிகமும் உதவினாலும் கடல் மாட்டு மனிதன் கொண்டிருந்த அச்சம் அவனை விட்டு நீங்கவேயில்லை. அகன்று, ஆழ்ந்து, பரந்துள்ள கடல் இரண்டு நினைவுகளை அன்றைய மனிதனுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. ஒன்று, இக்கடலின் உதவி கொண்டு வெளிநாடு சென்று பொருளிட்டலாம் என்பதாகும். இரண்டு, இவ்வளவு சிறப்புடைய கடல் திடீரென்று தன் நிலைமை மாறி இந்த மனிதனையும் அவன் ஏறிச் செல்லும் கப்பலையும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவதையும் அவன் கண்டு கொண்டமையே ஆகும். ஒரே பொருள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரண்டு செயல்களைச் செய்வதால், தன்னுடைய பிறவியைப் பற்றி நினைத்த மனிதனுக்குக் கடல் உவமையாயிற்று. வாணிகம் செய்து பொருளிட்டக் கடல் உதவியாவதுபோல் பிறப்பின் பயனை அல்லது வீடுபேற்றை அடைய இப்பிறப்பு உதவியாகவும் இருந்தது. அதே நேரத்தில் மனிதப் பிறவியிலிருந்து கீழான நிலைக்கு இவனைத் தள்ளவும் இதே பிறவி துணை நின்றது. மாறுபட்ட இவ்விரண்டு செயல் களையும் செய்யப் பிறவி துணையாய் இருந்ததுபோல், மாறுபட்ட இரண்டு செயல்களைச் செய்யும் கடலும் மனிதனுடைய மனத்தைவிட்டு நீங்கவேயில்லை. கடல்வழிச் சென்று பொருளிட்ட வேண்டு மானால் ஒரு மரக்கலம் தேவைப்பட்டது. அதே போலப் பிறவிக் கடலிலிருந்து முன்னேற வேண்டு