94 % அக ஞானசம்பந்தன் மானால் இறைவன் திருவடி என்ற தெப்பம் அல்லது மரக்கலம் அல்லது புணை தேவைப்படுகிறது. புனையின் உதவியின்றிக் கடலில் இறங்கியவர் மீள்வதில்லை. அதேபோல இறைவன் திருவடியென்ற புனையின் உதவியின்றிப் பிறவிக் கடலில் இறங்கிய வரும் அதிலிருந்து மீள்வது இல்லை. இரண்டு பாடல்களில் பிறவியைக் கடல் என்று உருவகித்த வள்ளுவர் இரண்டு இடங்களிலும் நீந்துவர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். கடலைத் தாண்டுவர் அல்லது கடப்பர் என்று கூறுவதை விட்டு விட்டு நீந்துவர் என்ற சொல்லைப் பயன்படுத்து வதன் நோக்கம் என்ன? நீந்துவர் என்று கூறினாலே மனிதனுடைய முயற்சியும், உழைப்பும் நினைவுக்கு வருகின்றன. இறைவன் திருவடியைப் புணை அல்லது தெப்பம் என்று கூறிவிட்டால், அங்கு மனித முயற்சிக்கு என்ன வேலை? பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் திருவடியாகிய தெப்பம் அல்லது புணை உதவுவது உண்மைதான். கடலைக் கடக்கத் தெப்பம் உதவுகிறது என்றாலும் அதிலே ஏறிக்கொள்ளும் முயற்சியை, புயல் முதலியவற்றின் வழியிலிருந்து அதனை விலக்கிச் செல்லும் முயற்சியை மனிதன் செய்தே தீரவேண்டும். அதேபோலத் திருவடியாகிய தெப்பம் கிடைத்தாலும் அதனை விடாது பற்றிக் கொள்ளும் முயற்சி மனிதனுக்குத் தேவை. பற்றிக் கொண்ட பொழுதும், புயற்காற்றுப் போலவும், சூறைக் காற்றுப் போலவும் உள்ள ஐம்பொறி. ஐம்புலப் பற்றுகள் இடையே திருவடிப்பிடிப்பைக் கழற்றி விட்டு
பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/122
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை