பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 95 விடும். அது நடைபெறாமற் பார்த்துக்கொள்ள வேண் டியது மனிதனின் கடமை என்பதை நினைவுறுத்தப் போலும், நீந்துவர் என்ற சொல்லை இருமுறை பயன் படுத்துகிறார் ஆசிரியர். இறைவன் என்ற சொல் இரண்டு குறள்களில் (5, 10) இடம்பெற்றுள்ளது. இவற்றையன்றி, ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று ஏழு தொடர்களால் இறைப் பொருளைக் குறிக்கும் புலவர், இறைவன் என்ற சொல்லைமட்டும் இந்தப் பத்துக் குறள்களில் இருமுறை பயன்படுத்துவது ஏன்? எங்கும் எல்லாவற்றிலும் நிலைபெற்றிருப்பவன் இறுத்தலைச் செய்பவன்) என்ற இச்சொல், இறைப்பொருளைக் குறிக்க ஈடிணையற்ற சொல்லாகத் தமிழ்மொழியில் விளங்குவதைக் கண்ட வள்ளுவர் அதனை இருமுறை பயன்படுத்துவதன் மூலம் அதன் சிறப்பியல்பை நினைவூட்டினாராயிற்று. - இச்சொல்லையல்லாமல் மேலே கூறிய ஏழு தொடர்களும் எங்கும் எல்லாவற்றிலும் அவனிருக் கின்றான் என்ற பொருளைத் தரவில்லை. அன்றியும் எல்லாவற்றிலும் தங்கியிருப்பது மட்டுமன்றி, எல்லாப் பொருளுக்கும் தலைவனாயும் உள்ளான் என்ற பொருளையுமல்லவா இச்சொல் தருகிறது! எனவே தான் இறைவன் என்ற சொல் இருமுறை பயன் படுத்தப் பெற்றது. எங்கும் எல்லாவற்றிலும் தங்குபவன் இறைவன் என்று கூறினாலும் எங்கே எவ்வெவற்றில் தங்கி