பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இ. அ.ச. ஞானசம்பந்தன் யுள்ளான் என்ற வினா மனித மனத்தில் இயல்பாய்த் தோன்றக்கூடிய ஒன்றேயாகும். இரண்டாம் நூற்றாண் டில் வள்ளுவர் பயன்படுத்திய இச்சொல்லுக்குப் பொருள் விரிக்கும் முறையில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த காழிப் பிள்ளையார், ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண்ஆண் குணம்மூன்றாய் மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய் ஆறு ஆர்சுவை ஏழு ஒசையோடு எட்டுத் திசைதானாய் வேறாய் உடன்ஆனான் இடம் விழிம்மிழலையே. (திருமுறை 1-11-2) என்ற அரிய பாடலில் விளக்கம் தருகிறார். இறுத்தல் அல்லது தங்கியிருத்தல் என்று கூறினால் ஓரிடத்தில் தங்கியுள்ளவன் மற்றோ ரிடத்தில் இல்லாமற் போய்விடுவானோ என்ற சங்கை (ஐயம்) தோன்றுமேயானால் அதற்கு விளக்கந்தரும் வகையில் காழிப்பிள்ளையார் பாடலின் பிற்பகுதி ‘தானாய், வேறாய் உடன் ஆனான் என்று பாடிச் செல் கிறது. தானாய் உடன் ஆனான்’ என்றமையால் பொருள்களின் உள்ளும் புறத்தும் கலந்துள்ளான் எனவும் வேறாய் என்றமையின் இப்பொருள் அனைத்தினும் வேறுபட்டுத் தனித்து நிற்பவன் என்றும் பொருள்தரும். தானாய், உடன் இருக்கும் நிலைக்கு நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் (திருமுறை 1.1324) என்று பிள்ளையாரே விளக்கம் அருளியிருக்கிறார். இதனையடுத்து மனத்தில் தோன்றக்கூடிய ஐய மொன்றுண்டு. உலகிடைக் காணப்படும் பொருள்