பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 97 களில், மிகமிகச் சிறிய துகள்முதல் மிகமிகப் பெரிய வானமண்டலம் வரை ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள்கள் உள்ளனவே அவனுடைய இறுத்தல்' செயல் இங்கும் நடைபெறுகிறதா என்ற வினாவிற்கு விடைகூறுவார் போலப் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் பக்தரும், மாபெரும் விஞ்ஞானியு மாகிய மணிவாசகப் பெருமான் பின்வருமாறு பாடிச் செல்கிறார். சென்றுசென்று அணுவாய், தேய்ந்து தேய்ந்து ஒன்றாம், நின்ற நின்தன்மை (திருவாச 394) என்றும் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே' (திருவரு: 395) என்றும் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. மேலே கூறிய பாடல்கள் அனைத்திலுமுள்ள கருத்தை ஒன்றாய் இணைத்து ஒரு சொல்லால் கூற வேண்டுமென்றால், தமிழ்மொழி முழுதும் தேடி னாலும் இறைவன்' என்ற சொல்லுக்கு இணையான வேறொரு சொல்லைக் காண்டல் கடினம். திருவள்ளுவருக்கு முற்பட்ட காலத்திலேயே எட்டுத் தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள், பரிபாடலில் முருகன், திருமால் பற்றிய பாடல்கள், திருமுருகாற்றுப்படைப் பாடல் ஆகிய அனைத்தும் இடம்பெற்றுள்ளன. என்றாலும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கி, இந்த உயிர்கள் உய்கதி அடையவேண்டுமானால், அவன் திருவடிகளைச் சரண் அடைவதுதவிர வேறு வழியே இல்லை என்பதைப் பத்தில் ஒன்பது குறள்கள் மூலம் (முதற்குறள் தவிர) விளக்கியுள்ளார் வள்ளுவப் பேராசான்.