பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 ஆ அச. ஞானசம்பந்தன் இச்சமுதாயத்திற்குச் சமய நூலொன்றைத் தருவது வள்ளுவரின் நோக்கமன்று. அறம், பொருள் இன்பம் என்ற மூன்றின் அடிப்படையில் தனிமனித னுக்கும் சமுதாயத்திற்கும் சில அடிப்படையான சட்டதிட்டங்களை வகுப்பதே திருக்குறளின் தலையாய நோக்கமாகும். 133 அதிகாரங்களில் இந்த ஓர் அதிகாரம் தவிர வான்சிறப்பு, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை உட்பட எல்லா அதிகாரங்களும் இந்த உலகிடைத் தனிமனிதனும் அவனைச் சேர்ந்த சமுதாயமும் இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதையே சொல்லிச் செல்கின்றன. இதனையல்லாமல் திருக்குறளுக்கு மற்றோர் தனிச்சிற்ப்பும் உண்டு. உலகிடைப் பிற பகுதிகளில் தோன்றிய அற நூல்கள் பெரும்பாலும் தாம் தோன்றிய காலம் சமுதாயம், அச்சமுதாயத்தில் வாழும் மக்கள் வாழ்க்கைமுறை என்பவற்றை அடிப் படையாகக் கொண்டே தோன்றின. அந்தச் சமுதாயத்தைத் தவிரப் பிற சமுதாயங்கட்கு இந்த அற நூல்களின் பெரும்பகுதி பயன்படுவதில்லை. அன்றி யும் ஒரு சமுதாயத்தில் தோன்றிய இந்த அறநூல்கள் பன்னூறு ஆண்டுகள் கழித்து அச்சமுதாயம் வளர்ந்த நிலையில் தாம் தோன்றிய அந்தச் சமுதாயத்திற்கே கூடப் பயன்படாமல் போய்விடுகின்றன. இவற்றை யெல்லாம் மனத்துட் கொண்ட வள்ளுவப் பேராசான் உலகின் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகின்ற சமுதாயத்திற்கும் பெரும்பாலும் ஒத்துப்