பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 99 போகக்கூடிய ஒர் ஒப்பற்ற அறநூலைப் படைக்க எண்ணினார் போலும். தமிழ்நாட்டில் தோன்றினாலும், தமிழ் மொழி யில் எழுதப் பெற்றிருந்தாலும் இன்றும்கூட எந்த நாட்டவரும் பெரும் பகுதியை ஏற்றுக்கொள்ளும் முறையில் இந்நூல் அமைக்கப் பெற்றுள்ளது. தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழர் இனம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதுவரை யாரும் முயலாத வகையில் ஒரு புதுமையை உண்டாக்கியுள்ளார் வள்ளுவப் பேராசான். எனவே தமிழர்க்கேயுரிய தனிச்சொத்து இது என்று யாரும் உரிமை கொண்டாடினால் அது பொருந்தாததாகும். இதனை நன்குணர்ந்த மகாகவி பாரதி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு (செந்தமிழ் நாடு : 7) என்று பாடிச் செல்கிறான். உலகம் முழுவதற்கும் பொதுவான ஒர் அற நூலை ஆக்க ஒருவர் முற்பட்டார் என்றால் அவர் சந்திக்கும் முதல் இடையூறு உலகின் பல்வேறு பகுதி களிற் பரவியுள்ள பல்வேறு சமயங்களாகும். இறைப் பொருளுக்கு ஒவ்வொரு சமயத்தாரும் ஒரு குறிப் பிட்ட பெயரைத் தந்துள்ளனர். இந்த நிலையில் பொது அறநூல் கூறவந்த ஒருவர் என்ன செய்யமுடியும்? இறைப் பொருளைப் பற்றிப் பேசாமலேயே அறநூலை வகுப்பது ஒரு வழியாகும். அவ்வாறின்றி அனைத்துச் சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் இறைப் பொருளைப் பற்றிப் பேசுவது மற்றொரு வழியாகும். வள்ளுவப்