பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இ. அ.ச. ஞானசம்பந்தன் பேராசன் இந்த இரண்டாவது வழியையே மேற் கொண்டார். அவர் காலத்தில் மேலை நாட்டிற் பரவியிருந்த யூத சமயம், பரவத் தொடங்கிய கிறிஸ்தவம் ஆகியவை தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பவில்லை. இந்தியாவில் தோன்றி வளர்ந்த சைவம், வைணவம், வைதிகம், புத்தம், சமணம் ஆகிய சமயங்கள் மட்டுமே தமிழகத் திலும் இந்தியாவிலும் கால்கொண்டிருந்தன. புத்தரும், சமணரும் கடவுள் என்று தனியே ஒரு பொருளைக் கருதியதில்லை; புத்தசமயத்தை நிறுவிய கெளதம புத்தரையும், ஜைன சமயத்தை நிறுவிய மகாவீரர் என்று அழைக்கப்பட்ட ரிஷபதேவரையும் உயிர்கட்கு விடுதலை வழங்கும் தெய்வங்களாக அச்சமயத்தினர் போற்றினர். வேத வழக்கொடுபட்ட வைதிக சமயம் யாகம் முதலியவற்றைச் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. இந்திரனையே முழுமுதற் பொருளாக இருக்கு முதலிய வேதங்கள் கருதிக் கூறின. இவற்றையல்லாமல் சிவனை வழிபடும் சைவமும், விஷ்ணுவை வழிபடும் வைணவமும் அன்றைய இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பரவியிருந்தன. வள்ளுவர் காலத்தில் இச் சமயங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் சமயப் பூசல் என்ற ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. வைதிகம் தவிர்ந்த ஏனைய நால்வகைச் சமயத்தாரும் தத்தம் சமயங் களைப் போற்றினரே தவிரப் பிற சமயங்களை இழித்தோ, பழித்தோ குறைகூறவில்லை. இந்தக் கால கட்டந்தான் வள்ளுவர் தோன்றிய காலகட்டம். வட மொழி உட்பட மேற்கிலும், கிழக்கிலும் வடக்கிலும்