பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 101 தோன்றிய அறநூல்களையெல்லாம் வள்ளுவர் கற்றி ருத்தல் கூடும். அப்படிக் கற்கும்பொழுதே அவற்றி லுள்ள குறைபாடுகளையும் அவர் அறிந்திருத்தல் கூடும். அதனால் அந்நூல்களிலுள்ள குறைபாடுகள் தம் நூலில் வராமல் அவர் பார்த்துக்கொண்டார். இதுவே அவருடைய தனித்தன்மைக்கு மூலகாரண மாகும். இதனால் விளைந்த சிறப்பு ஒருபுறமிருக்கப் பின்னே வந்தவர்கள் வள்ளுவர், தத்தமக்கே உரியவர், தம் கொள்கைகளைப் பரப்பவே அவர் நூல் செய்தார் என்ற அளவிற்குப் போய்விட்டனர். தமிழை நன்கு கற்ற ஜி.யூ போப் கூட இத்தவற்றைச் செய்யாம லில்லை. யேசுவின் சீடரான செயிண்ட் தாமஸ் சென்னைக்கு வந்தார் என்றும் அவரொடு பழகி, அவர் கூறியவற்றில் பெரும்பாலனவற்றைக் குறளாக வடித்தார் என்றும் எழுதியுள்ளார் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியார். கேசவ ஐயங்கார் என்ற சிறந்த வழக் குரைஞர் வள்ளுவர் வடகலை ஐயங்கார் என்பதை நிலைநாட்ட 400 பக்கங்களில் ஒரு நூலை எழுதி யுள்ளார். இவ்விதமான மாறுபட்ட சமயச் சிக்கல் களில் நுழைய விரும்பாத காரணத்தால்தான் வள்ளு வருடைய முதல் அதிகாரம் சமயச் சார்புடைய எந்தக் கடவுள் பெயரையும் குறிக்கவில்லை. அதே நேரத்தில் சமுதாயத்தை முன்னேற்றிச் செலுத்த தேவையான இடங்களில் தாம் சொல்ல வந்த கருத்தை அழுத்த மாகச் சொல்லிச் செல்கிறார் என்பதைப் பின்வரும் உதாரணத்தால் அறியலாம். . திருவள்ளுவர் காலத்தில் மேலை கீழை நாடுகள் அனைத்திலும் மக்கள் தங்களுக்குள் வேற்றுமை