பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii "பார்க்கலாம்...! அதற்குமுன், பெரிய புராணத்தில் பற்பல இடங்கள் புதிய வடிவுடன் வந்து வலுக்கிறது எழுதலாமா என எண்ணுகிறேன்” என்றார். 'சரி ஐயா எழுதிடலாம் என்றேன் நான். இதற்கிடையில், இலக்கியச் சிந்தனை திரு. ப. இலட்சுமணன், விஸ்வநாதன், பாரதி எனும் மூவர் வந்து, ஐயாவின் அருகிருந்து சிந்தனையை முடுக்கிப்பின் uđSITöö6)||b (cassette recording) (puffirmissi. உடல்நிலை பெரிதாக ஊறுசெய்த காரணத்தால் இலக்கியச் சிந்தனையார் எடுத்த முயற்சியும் நிறைவேற்ற முடியாமல் பதிவற்றுப் போனது. பெரியபுராணத்தில், சிந்தனை தெளித்ததோர் சிதறல் மட்டுமே துளித்துளியாய் எழுத்தாச்சு. ஞானசம்பந்தர் திருமுலைப்பால் உண்டதனைப் புதிய கோணத்தில் திருவருள் நடத்தியது. 'தம்மேலைச் சார்புணர்ந்த சம்பந்தப் பெருமானைச் செம்மையாய் வெளிப்படுத்த ஐயா நினைத்திருந்தார். சேக்கிழார் திருமொழியும் சம்பந்தர் அருள்மொழியும் கலந்த புத்தமுதப் புதுப்பொலிவின் சுவையுணர்ந்து, தெ.ஞா., மணவாளன் போன்ற முனைவர்களை