பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ళ அ.ச. ஞானசம்பந்தன் பாராட்டி வந்தனர் என்பதை மறுத்தற்கில்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பிறப்பால் வேறு பாடு கற்பித்து, நால்வகை வருணம் என்ற பெயரில் சாதி வேற்றுமைகளைக் கற்பித்தனர். மேலை நாடு களைப் பொறுத்தமட்டில் ஒருசிலர் ஆளப்பிறந்தவர் கள் என்றும் வேறுசிலர் அடிமைகளாக இருக்கவே பிறந்தனர் என்றும் கருதினர். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த நான்கு வகை வருணச் சாயல் தொல்காப்பியர் காலத்தி லேயே இருந்து வந்தது என்பதை அறுவகைப்பட்டப் பார்ப்பனர் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், (தொல்-பொருள்: புறத்திணை-16) என்ற நூற்பாவால் அறியலாம். இப்பிரிவினை செய்யும் தொழிலால் தோன்றியிருக்கலாம். நாளாவட்டத்தில் பிறப்பால் சாதி கற்பிக்கப்பட்டுவிட்டது. வள்ளுவர் இதனைக் கண்டிக்கவே, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் (குறள்-972) என்று பாடிச் சென்றார். உயிர்ப்பலி கொடுத்து வேள்விகள் செய்யும் வைதிக சமயத்தின் தாக்கம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் புகுந்துவிட்டது என்பதற்கு எடுத்துக் காட்டு பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, 'இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போன்ற பெயர் களேயாகும். இந்த வைதிக சமயத்தின் தாக்கம் எப்பொழுது தமிழகத்தில் புகுந்ததோ அப்பொழுதே உயிர்ப்பலியைத் தடுக்கும் ஜைன சமயம் தமிழகத்தில் புகுந்துவிட்டது. ஏறத்தாழ அதே காலத்தில் மஹா யான புத்தமும் தமிழகத்தில் நிலைபெறலாயிற்று. சமண சமயத்தினர் உயிர்ப்பலியைத் தடுக்கப் பெரிதும்