பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ↔ 103 முயன்றனர். எவ்வளவு முயன்றும், மேட்டுக்குடி மக்கள் மத்தியில் யாகங்கள் பரவியிருந்திருந்ததைச் சமணர்களால் தடுக்க முடியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கொடுமையைக் கண்டிக்க வந்த வள்ளுவர் ஒன்றாக நல்லது கொல்லாமை (குறள் 323) என்றும் அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259) என்றும் பாடிச் சென்றார். இக்குறளில் காணப்படும் அவி என்ற சொல் 'அவிஷ்' என்ற வடமொழிச் சொல்லின் மற்றொரு வடிவேயாகும். வாஜபேயம் முதல் இராசசூயம் வரை உள்ள 21 வகை வேள்விகளிலும் யாககுண்டத்தில் தேவர்கள் பொருட்டாக இடப் படும் உணவு அவிஷ்' என்ற சொல்லால் குறிக்கப் பட்டது. வேத காலந்தொட்டு கி.பி. 6, 7ஆம் நூற்றாண்டுவரை இந்த 21 வகை யாகங்களிலும் யாக குண்டத்தில் அவிஷ் சொரியப்பெற்றது. இந்த அவிஷின் முக்கிய பகுதி நெய்யும் இறைச்சியுமாகும். பல்வகை மிருகங்கள் பலியிடப் பெற்று அவற்றின் இறைச்சி அவிஷாகச் சொரியப்பெற்றது. இந்த அடிப்படையை மனத்துட்கொண்டே உயிர்க்கொலை புரியும் ஆயிரம் யாகங்களைவிட ஒரு விலங்கின் இறைச்சியை உண்ணாமல் இருப்பது சிறந்தது என்று வள்ளுவர் கூறினார். - - - குறளுக்கு உரை எழுத வந்த மணக்குடவர் முதலாகப் பரிமேலழகர் ஈறாக அனைவரும் அவி என்ற சொல்லுக்கு நெய்ச் சோறு என்று பொருள் கூறிப்போயினர். இவ்வாறு பொருள்கூறுவதாயின்