பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இ. அ.ச. ஞானசம்பந்தன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்தி களை இக்குறள் கூறுவதாக முடியும். நெய்யைச் சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணாமல் இருத்தல் நன்று என்று இந்த உரை யாசிரியர் கருத்துப்படி பொருள்கண்டால் தொடர் பில்லாத இரண்டு செய்திகளை ஒன்றாக இணைத்துக் கூறிய குற்றம் வள்ளுவரைச் சேரும். அவ்வாறு கொள்ளாமல் ஆயிரம் விலங்குகளைக் கொன்று ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணாமல் இருப்பது நன்று என்று பொருள் கொள்வதே சிறப்புடையதாகத் தெரிகிறது. புலால் மறுத்தலை அழுத்தமாகவும் மென்மையாகவும் கூறிய ஆசிரியர் தேவை ஏற்படும்பொழுது மிகக் கடுமை யாகச் சொற்களைப் பயன்படுத்தவும் தயங்கிய தில்லை. மனிதன் எந்தக் காலத்திலும் எந்தச் சந்தர்ப் பத்திலும் தன்னுடைய நிலையிலிருந்து தாழக்கூடாது என்பதைக் கூறவந்தவர் தலையி னிழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையி னிழந்தக் கடை குறள் 964) என்று பாடுவதன்மூலம் நிலையில் தாழ்ந்தவர்களை உதிர்ந்த உரோமத்திற்குச் சமம் என்று கூறுவது சிந்திக்கற்பாலது. மென்மையாகவும், தேவை ஏற்படின் வன்மை யாகவும் பேசவல்லவர் வள்ளுவர் என்பதை இங்கே எடுத்துக்காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஆறறிவு படைத்த மக்கள் இறைவனை வழிபடவேண்டும்;