பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 105 அதன் பயனாக உலகத் துனபங்களிலிருந்து விடுபட முடியும்; பிறப்பு நீங்கி வீடுபேறு அடையவும் அதுவே வழியாகும் என்பதை வள்ளுவருக்கு முன்னரே கூடத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் சொல்லிச் சென்றன. இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீயாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி (திருமுரு: 293-295) என்ற பகுதியில் காணப்பெறும் பெறலரும் பரிசில்' 'விழுமிய பரிசில்' என்ற தொடர்களுக்கு வீடுபேறு என்று பொருள் கூறினர் நம் முன்னோர். . உயிர்கள் அடையவேண்டிய முடிவான பயன் வீடுபேறு என்பதையும் அதனைப்பெற ஒரே வழி இறைவன் புகழ்பாடி அவன் திருவடிகளை வணங்கு தலே ஆகும் என்பதையும் வள்ளுவருக்கு முன்னரும் கூறியிருக்கிறார்கள். என்றால் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்குத் தனிச்சிறப்பு ஏதேனும் உண்டோ என்ற வினாத் தோன்றுமேயானால் பின்வருமாறு விடை கூறலாம். . மேலே கூறிய கருத்தையே வள்ளுவரும் பாடினார் என்றாலும் இரண்டு முக்கிய வழிகளில் இவர்களினும் மாறுபடுகிறார் வள்ளுவர். பழைய சங்கப் பாடல்களில் உயிர்கள் வணங்க வேண்டும் என்று கூறும்பொழுது சிவபெருமான், முருகன், திருமால் என்ற மூவருள் யாரேனும் ஒருவரைக் குறிக்காமல் இருப்பதில்லை. மிக உயர்ந்த கருத்தைக் கூறியிருப்பினும் கடவுளின் ஒரு பெயரை இப் பாடல்கள் சுட்டு தலின் தனிப்பட்ட ஒரு சமயத்