பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. இ. அ.ச. ஞானசம்பந்தன் தாருக்கு உரியன என்ற எண்ணம் தோன்றலாயிற்று. இந்தக் குறைபாட்டை நீக்க, எந்தக் கடவுளின் பெயரையும் சுட்டாமல், வள்ளுவரின் முதல் அதிகாரம் அமைந்துள்ளது. இறைவன் திருவடியை வணங்கவேண்டும் என்று மேலே கூறிய கடவுட் பாடல்கள் பேசுகின்றன என்பது உண்மையானாலும் வள்ளுவரைப் போல இவ்வளவு அழுத்தம் தந்து கூறவில்லை. இறைவன்தாளை வணங்காத தலை கல்வியால் நிறைந்திருந்தும், பயனற்றதாகும். எண்குணத்தான் தாளை வணங்காத் தலையிலுள்ள ஐம்பொறிகளும் பயனற்றவை; இறைவன் தாளைச் சேராதவர் மனக் கவலையை மாற்றல் அரிது; இறைவன் அடி சேராதார் பிறவிக் கடலை நீந்தமாட்டார், அடிசேர்ந்தார்க்கு யாண்டும் (எக்காலத்தும் எவ்விடத்தும்) இடும்பை இல்லை, இறைவன் புகழ்புரிந்தார் மாட்டு (உறுதியாக) இருவினையும் சேரா என்றெல்லாம் மிக அழுத்தம் தந்து கூறியுள்ளமை குறளின் தனிச்சிறப் பாகும். நயமாகவும், ஒரளவு அச்சுறுத்தும் வகையிலும், இடித்துக் கூறும் வகையிலும் இறையடி புகழ்தல் எவ்வளவு இன்றியமையாதது என்று இவர் கூறியது போல, சமயநூல் தவிர வேறு எந்த நூலிலும் காண முடியவில்லை என்பது உண்மை. தனிமனித, சமுதாய அறங்களைக் கூறித் தனி மனித வாழ்வும், சமுதாய வாழ்வும் எப்படி அமைய வேண்டும் என்பதை 132 அதிகாரங்களில் விரிவாகப் பேசியுள்ளார் வள்ளுவர். அப்படியிருக்க, இறையடி பேணுதல் எவ்வளவு இன்றியமையாதது என்று