பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 107 முதலாம் அதிகாரத்தில் ஏன் சொல்ல வேண்டும்? தனிமனித வாழ்வும் சமுதாயவாழ்வும் செம்மையாக அமையவேண்டுமானால், ஆண் பெண் என்ற இரு பாலாரும் உள்ளிட்ட மனிதர்கள், முதல் அதிகாரத் தில் சொல்லியதை வாழ்க்கையின் அடித்தளமாகக் கொள்ளவேண்டும் அவ்வாறின்றேல் அவர்கள் அறவாழ்வு வாழ முடியாது; மனத்தையும் உணர்ச்சி களையும் அடக்கிப் பிறர் பொருட்டு வாழும் அன்பு வாழ்க்கை, எவ்வளவு கற்றாலும் பெற முடியாது. இதனை நேரிடையாகச் சொல்லாமல் பின்னர்ப் பேசப் போகின்ற 132 அதிகாரங்களுக்கும் முன்னதாக இந்த அதிகாரத்தை வைப்பதன் மூலம் குறிப்பால் உணர்த்துகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வான்சிறப்பு பாயிரம் என்ற பொதுத் தலைப்பிட்டு அதனுள் பொருளின் முதல் நான்கு அதிகாரங்களை யார் அடக்கினார்கள் என்று தெரியவில்லை. எல்லா நூலுக்கும் பாயிரம் என்று ஒன்று வேண்டும்; பாயிரம் என்பது நூலின் நுழைவாயில் என்றெல்லாம் பிற்காலத்தில் இலக்கணம் வகுத்தனர். அத்தகைய காலத்தில் பாயிரம் என்று ஒன்றில்லாமல் கடவுள் வாழ்த்து என்பதுடன் திருக்குறள் தொடங்குவதைக் கண்ட அன்றைய நாள் அறிஞர் பாயிரம் என்ற ஒன்று இல்லாமல் இருக்கக்கூடாது என்ற கருத்தில், நான்கு அதிகாரங்களை ஒன்றாக்கிப் பாயிரம் என்று பெயரிட்டனர் போலும்.