பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ↔ அச. ஞானசம்பந்தன் மனித ஒழுக்கம் வகுக்கும் ஒரு சட்ட நூல் போன்று அமைந்திருக்கும் திருக்குறளுக்குக் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற தலைப்புக்களுடன் குறள்கள் அமைந்திருப்பது பொருத்தமில்லை என்று கருதிய சிலர் இந்தப் பாயிரமே திருக்குறளோடு தொடர் புடையதன்று என்று சொல்லுமளவிற்குச் சென்று விட்டனர். பாயிரம் என்ற தலைப்பு ஒருவேளை பொருத்த மற்றதாக இருக்கலாமே தவிர, இந்த நான்கு அதிகாரங் களும் தேவையற்றவை என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக் காம்ல் கூறப்பட்டதேயாகும். - கடவுள் வாழ்த்தையடுத்து, வான்சிறப்பு என்ற பெயருடன் மழையின் சிறப்பைப் பேசுவது எவ்வாறு பொருந்தும் என்று பலர் நினைக்கக் கூடும். முதலாம் அதிகாரத்தில் இறைவனை வணங்குவதே மானிடப் பிறப்பின் பயன் என்று கூறிவந்த வள்ளுவருக்கு உலக நினைவு வருகிறது. அவன் நற்றாளைத் தொழ வேண்டும்; தொழுதால் கவலைகள் தீரும்; பிறவிக் கடலை நீந்தலாம் என்றெல்லாம் சொல்லி முடித்த வுடன் மனிதர்கள் இதனைச் செய்யவேண்டுமானால் அதற்கு முன் ஒர் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நினைவு ஆசிரியருக்கு வந்தது போலும். அந்த அடிப்படைத் தேவை என்ன? மனிதனின் வயிற்றுப் பசி தீர்க்கப்பட வேண்டும். பசித்த மனித னுக்குக் கடவுள்கூட ரொட்டித் துண்டின் வடிவில் தான் வருகிறான் என்று விவேகானந்தர் கூறியது