பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 109 சிந்திக்கற்பாலது. பசியால் வாடும் மக்களைப் பார்த்து தாளை வணங்காத் தலை இருந்து பயன் என்ன என்று கேட்டால் அவ்வினாவிற்கு அவன் விடைகூறத் தயாராக இல்லை. தலை என்ற ஒன்று உடம்போடு ஒட்டியிருத்தலாலும் அந்த உடலின் இயக்கம் வயிற்றுப் பசியோடு தொடர்பு கொண்டு இருத்த லாலும் மனிதனுடைய செயல் முழுவதற்கும் பசியே அடிப்படையாக இருக்கிறது. பசி தனியாவிடத்துத் தாளை வணங்குவது ஒருபுறமிருக்க எச்செயலையும் செய்யமுடியாமல் போய்விடும். எனவே மனிதனின் பசிப்பிணியைப் போக்குதல் இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஆசிரியர் மழையைப் பற்றி இரண்டாவது அதிகாரத்தில் பேசுகிறார். பசியைப் போக்குவது உணவு; உணவை விளைவிப்பது மழை. மழையின்றேல் உணவுமட்டுமா இல்லாமல் போய்விடும்? மனிதனே வாழமுடியாமற் போய்விடும். அவன் வாழ்க்கைக்கு ஆதாரமாக 24 மணிநேரமும் துணை நிற்பது உயிர்ப்பு எனப்படும் மூச்சுக்காற்றாகும். அடுத்த நிலையில் இருப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தேவைப்படும் தண்ணிர் ஆகும். நீரின்றேல் பயிர்கள் இல்லை; பயிர்கள் இன்றேல் உணவில்லை; உணவின்றேல் உயிர்கள் இல்லை. உயிர்கள் உண்டு என்றால் தேவைச் சங்கிலியில் முதலில் நிற்பது நீராகும். மனிதன் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், அவன் முதல் தேவை யான நீரின்றேல் அவனோ வேறு உயிர்களோ எதுவும் வாழமுடியாது. ஆதலின், நீரின்றமையாது உலகு (குறள் 20) என்று கூறினார் வள்ளுவர்.