பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ↔ அச. ஞானசம்பந்தன் உயிர்கள் செம்மையான அறநெறியைக் கடைப் பிடித்து இல்லறம் நடத்தி, சமுதாயமாக வளர்ந்து சிறப் பான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் அவற்றின் முதல் தேவை உணவு அல்லது நீர். எனவே, அறம் என்றால் என்ன என்பதைச் சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், இன்றியமையாத நீரை முதலில் வைத்தார். அப்படியானால் கடவுள் வாழ்த்தை அதற்கும் முன்னர் வைத்ததன் காரணம் என்ன என்ற ஐயம் தோன்றினால் விடை கூறுவது எளிது. இவ்வாழ்க்கைத் தொடரில் உணவில்லாமலும் சிலகாலம் வாழலாம்; நீரில்லாமலும் சில நாட்கள் வாழலாம்; உயிர்ப்பின் மூச்சுக் காற்றை அடக்கிக் கூட சில மணிநேரம் வாழலாம். ஆனால் இறையுணர்வு இவைபோன்றா? இறையுணர்வில்லாமல் வாழ முடியாதா என்ற வினாவை எழுப்பினால் வாழலாம்; ஆனால் அது மனித வாழ்க்கையாக இராது. விலங் கினும் கீழாான வாழ்க்கையாகவே இருக்கும். உணவு, நீர், மூச்சுக்காற்று என்பதைப் போலல்லாமல் இறை யுணர்வு ஒரு வினாடியும் தவறாமல் உள்ளத்தில் ஊற வேண்டும். அப்பொழுதுதான் அந்த வாழ்க்கை பயனுடையதாகும். ஆதலால் எல்லாவற்றிற்கும் முன்னர்க் கடவுள் பற்றிய சிந்தனைகளை முதலாம் அதிகாரமாக வைத்துள்ளார். மிகப்பழைய காலம் தொடங்கி, விஞ்ஞானம் அளவில்லாமல் வளர்ந்திருக்கும் இக்காலத்தில்கூட, மழை மனிதனுடைய எல்லைக்கு அப்பால் உள்ளது. மழையின்மை என்ற வற்கடத்தையும் வெள்ளப் பெருக்கையும் தவிர்க்க முடியாமல் இன்றும் மனிதன்