பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 11 வாழ்கிறான். இந்த நிலையை அன்றே உணர்ந்த வள்ளுவர், கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை (குறள்-15) என்று பாடிச் சென்றார். பசுமைப் புரட்சி, புதிய ஆராய்ச்சியில் கண்ட வீரிய விதைகள், வேலியாயிரம் கலம் விள்ையப் புதிய கண்டுபிடிப்புகள், சொட்டு நீர்ப் பாசனம் ஆகிய அனைத்தையும் குறிக்கும் வகையில், ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால் (குறள்-14) என்ற குறளை எழுதிச் செல்கிறார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இயற்கையை வென்று விட்டது என்று சிலர் பேசுவதைக் கேட் கிறோம். அப்பேச்சு எவ்வளவு அறியாமையுடையது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். விண்ணில் பறப்பதும், நீரில் கப்பலோட்டுவதும் இயற்கையின் உதவியைக் கொண்டு நடைபெறுகின்றனவே தவிர இயற்கையை வென்றதால் தோன்றிய விளைவன்று. மழை பொய்த்துவிட்டால் கடல் வற்றிவிடும் என்று ஆசிரியர் கூறவில்லை. எத்தனை ஆண்டுகள் மழை குன்றினாலும் கடல் வற்றப்போவதில்லை. ஆனால் தன்னுடைய தன்மை இழந்துவிடும். நீர்வரத் தின்மையின் Dead Sea முதலிய கடல்கள் நீர்மை குன்றித் தண்ணிரின் இயல்பை இழந்து இன்றும் விளங்குவதைக் காண்கிறோம். இக்கருத்தையே