பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii அழைத்துக் கொடுத்துப் பரிமாறி மகிழ்ந்திருந்தார். முன்வைக்கும் வேளைகளில் மூச்சுடன் சண்டையிட்டார். இடையிலொன்று 06.08.2002 அன்று ஐயா விடைபெறும் இருபது நாட்களின் முன்..... "இரவு படுக்கும்போது, மெய்பொருளார் பற்றிய பல்வகைத் தோற்றங்கள் எழுந்தவண்ணமே இருந்தன மனத்தில். கலந்துரையாடியபின்,சம்பந்தரை நிறைத்துவிட்டுஎழுதுவோம்” என்று சொன்னார். காலையில் வழமைபோல் டாக்டர் சிவராசனும் கெளரி அங்கிளும் கலந்துரையாடுவதற்கு வந்து அமர்ந்தனர். வருவதற்கு முன்னேயே தொலைபேசியில் டாக்டரொடு மெய்ப்பொருளார்பற்றிச் சிலவற்றைத் தொடுத்திருந்தார். ஆக், வந்தவுடன் டாக்டரிடம்..... "தேடியமாடு நீடு செல்வமும்” என்றதில் தேடிய செல்வமெது? நீடிய செல்வமெது? வினாவைத் தொடுத்து விடையால் மகிழ்ந்தார்; 'மாடு” என்பதற்கு மற்றொன்றும் விரித்தார். பின்னர், "அன்பர்க்கு ஆவன ஆகும்” என்னும் தொடரிலும் "பொய்தவ வேடங்கொண்டு புகுந்தனன்” என்பதிலும்