பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இ. அ.ச. ஞானசம்பந்தன் வானம் வழங்காவிடின் கடல் தன் தன்மையை இழந்து விடும் என்று பொருள்பட, நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (குறள்-17) என்று வள்ளுவர் பாடுகிறார். மனித வாழ்க்கையின் அடித்தளம் இறை யுணர்வாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே முதலதிகாரத்தைப் படைத்தார் என்று முன்னரும் கூறினோம். வயிற்றில் பசிவந்தக்கால் இந்த இறை யுணர்வைக் காப்பாற்றுதல் கடினம் எனக் கூறவந்த ஆசிரியர், சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமோல் வானோர்க்கும் ஈண்டு (குறள்-18) என்றும் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் - வானம் வழங்கா தெனின் (குறள்-19) என்றும் 18ஆம் 19ஆம் குறள்களில் இறையுணர்வின் வெளிப்பாடாகிய பூசனையை முதலிற் கூறி அதனுடைய அகத்துறுப்பாகிய தவத்தை 19ஆம் குறளில் பேசுகிறார். அதாவது பூசனை செல்லாது', தவம் தங்காது என்ற இரண்டு தொடர்களில் இறை யுணர்வுடையார்களிடத்துக் காணப்பெறும் இரண்டு பண்புகளை இந்த இரு குறள்களிலும் பேசியுள்ளார். பூசனை என்பது பெரும்பாலும் புறத்தே செய்யப் பெறும் சில கிரியைகளைக் குறிப்பதாகும். இவற்றைப் புறத்தே இருப்பவர் காணவும் முடியும். பூசனை செல்லாது என்பதால் பூசனை செய்பவர் பசியின்