பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 113 காரணமாக அதனைச் செவ்வனே செய்ய முடியாது என்பதை விளக்கினார். ஒருவேளை தம் உறுதி காரண மாக அரையும் குறையுமாகப் பூசனை செய்வாரேனும் புறத்தே இருப்பவர்கள் அவர்களுடைய பசியின் காரணமாக அதனைக் காணவும், ஈடுபடவும், முடியாமற்போய்விடும். இவை அனைத்தையும் உள்ளடக்கியே சிறப்பொடு பூசனை செல்லாது என்றார். தானம், தவம் இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பேசுவதில் ஒரு சிறப்புண்டு. தவம் என்பது அகத்தே நிகழ்கின்றதொன்றாகும். காட்டிற் சென்று, கனசடை வைத்து, நீரில் மூழ்கி, அள்ளிலைத் தாளி கொய்து வழிபடும் தவத்தை இங்கே குறிக்க வில்லை. வீட்டிலிருந்துகொண்டே பொறி, புலன் களை ஒருமுகப்படுத்திச் சிந்தையை ஒருநிலைப் படுத்தும் தவத்தையே இங்குக் குறிக்கின்றார். இந்தத் தவத்தைத்தான் ஆசிரியர் குறிக்கிறார் என்பதை அறிவிப்பதற்காகவே தானம்' என்ற சொல்லை முதலில் வைக்கின்றார். காட்டில் தவம் புரிபவர் தானம் செய்தல் இயலாதகாரியம். நாட்டில் இல் வாழ்க்கை மேற்கொண்டு பொருள்சேர்ப்பவர்களே தானம் செய்தலில் ஈடுபடமுடியும். இந்தத் தானம் தானும் புறத்தே நிகழ்கின்ற ஒரு செயலாகும். இல் வாழ்க்கையில் தானம் செய்யத் தொடங்குபவர்கள் வளர்ச்சியடைந்து இல்லறத்தில் இருந்தபடியே மனத் துறவும் தவமும் மேற்கொள்ளல் அக்கால மரபாகும். இதனையே தொல்காப்பியம்,