பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இ. அ.ச. ஞானசம்பந்தன் காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்-பொரு-கற்பு-5) என்று குறிக்கின்றது. 19ஆம் குறளில் தவம் என்று சொல்லும்போது புறத்துறவை மேற்கொண்டு காட்டில் வாழ்பவர்களை ஆசிரியர் குறிக்கின்றார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. தானம், தவம் என்ற இரண்டு சொற்களை அடுத்தடுத்துவைத்துக் கூறியுள்ளமையின் இத்தவம் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளும் மனத் துறவு என்று பொருள்கொள்ளுதலே சிறப்புடையதாகும். வள்ளுவர் காலத்திற்குச் சற்றுமுன்பேகடப் புறத்துறவை மேற்கொண்டு காடுகளிற் சென்று தவம் புரியும் பழக்கம் தமிழகத்தில் புகுந்துவிட்டது என்று நினைக்க வேண்டியுள்ளது. துறவற இயல் என்று ஒரு தனிப்பகுதியே இன்றுள்ள பதிப்புக்களில் காணப்பெறுகிறது. ஆனால் அதிலுள்ள பதின்மூன்று அதிகாரங்களையும் பார்த் தால் இவை துறவறத்தார்க்கு மட்டும் கூறியனவா என்ற ஐயம் எழுகிறது. இவ்வியலில் காணப்பெறும் பதின்மூன்று அதிகாரங்களில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்ற நான்கு துறவற வியலில் இடம்பெறக் கூடியவை என்பதில் ஐய மில்லை. இங்குத் தவம் என்ற அதிகாரம் இல்லறம் துறவறம் இரண்டிற்கும் உரியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் அருளுடைமை, புலால்