பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ: 15 மறுத்தல், கூடாஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை என்பவை சமுதாயமாகக் கூடிவாழும் மக்களுக்குத் தான் மிகுதியும் தேவையே தவிர, சமுதாயத்திலிருந்து ஒதுங்கிவாழும் துறவறத்தார்க்கு இவற்றைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. வேண்டின் உண்டாகத் துறக்க (குறள்-342) என்றும் “அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை' (குறள்-343) என்றும் யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (குறள்-34) என்றும் துறவு என்ற அதிகாரத்தில் ஆசிரியர் கூறுவது புறத் துறவைக் கூறியதாகவே தெரிகிறது. தவம் என்ற சொல்லைத் துறவு என்ற அதிகாரம் முழுவதிலும் ஒரு முறைகூடப் பயன்படுத்தவில்லை. மேலும் தவம் என்ற அதிகாரத்தில் வரும், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம் (குறள்-263) என்ற குறளில் இல்லறத்தாருக்கே தவம் பேசப்பெற் றுள்ளது. அடுத்து, தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார் (குறள்-266) என்ற குறளிலும் பிறர் பசிபோக்கித் துன்பம் களையும் கடப்பாடுடைய இல்லறத்தார் அவற்றைச் செம்மை யாகச் செய்யும்போது தவஞ்செய்தவராகவே கருதப் படுவார் என்ற கருத்துப் பேசப்பெறுகிறது.