பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆ அ.ச. ஞானசம்பந்தன் தவம் என்ற சொல் இல்லறத்தார்க்கே உரியது. என்றும் அதனைத் துறவறத்தார்க்கு ஏற்றிப் பரிமே லழகர் போன்றோர் பேசுவது பொருத்தமுடையதா என்றும் சிந்திக்கவேண்டும். இக்கருத்துக்கு அரண் செய்யும் முறையில், ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் (குறள்-264) என்ற குறள் அமைந்திருப்பதைக் காணலாம். வள்ளுவர் காலம்வரை நினைத்த மாத்திரத் தானே தம் துறவு வலிமை காரணமாக ஆக்கல் அழித்தல் என்ற இரண்டும் செய்யப்படக்கூடும் என்ற எண்ணம் நிலவி வந்தது. நாளாவட்டத்தில் இக் கருத்துப் பொருத்தமுடையதன்று என்ற எண்ணம் தோன்றலாயிற்று. புறத்துறவு மேற்கொண்டு வனத் திடைச் சென்று தவம் இயற்றுவோர் முதலாவது வெல்லவேண்டியது அவரது அகப்பகையாகிய பொறி புலன்களையாகும். இதனை வென்றபிறகு அவர்கள் அகத்திடைத் தோன்றும் பேராற்றல் காரணமாகச் சாப விமோசன ஆற்றல் பிறக்கிறது. விருப்பு வெறுப்பு என்னும் இரட்டைகளிலிருந்து விடுபட்டு இந் நிலையை அடைந்தவர்கள் யாரோ ஒருவரை ஒன்னார் (பகைவர்) என்றும் மற்றொருவரை நண்ப ரென்றும் கருதமாட்டார்கள். அன்றியும் ஒன்னார் என்ற சொல்லின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். இல்லறத்தில் வாழும் சாதாரண மனிதர்கட்கும் அவர்களை வைத்து ஆளும் அரசனுக்கும்தான் பகைவர் என்றும் நண்பர் என்றும் இருபகுதியினர்