பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ஒ 17 உண்டு. எனவே ஒன்னார்த் தெறல் (264) என்ற குறள் இல்லற தர்மத்தை நல்லமுறையில் கடைப்பிடித்து வாழும் இல்லறத்தாருக்கும் அச்சமூகத்தைக் கட்டி யாளும் அரசனுக்கும் உரியதாகும். அப்படியானால் நால்வகைப் படைகளையும் கொண்டு ஒன்னாரை அழிக்கும் அரசனுக்கும், தம் முடைய இல்லறதர்மம் நன்கு நடைபெறாமல் தடுக்கும் சமுதாயப் பகைவர்களையும், வெல்ல வேண்டிய சூழ்நிலை இல்லறத்தாருக்கும் அமைந்து விடுகிறது. இவர்கள் இருவரும் போராடித்தான் தம் பகைமையை வெல்லவேண்டும் என்ற சூழ்நிலை சமுதாய வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட ஒன்றாகும். இந்நிலையில் நால்வகைப் படைகொண்டு பகையை அழிக்கும் அரசனுக்கும் தம்மோடு ஒத்த இயல்புடைய சிலரை அமைத்துக்கொண்டு சமுதாயத் தீமை செய்வோரை வெறுக்கும் இல்லறத்தானுக்கும் என்ன தேவை? அரசனுக்குப் படைகள் தேவை; இல்லறத்தானுக்கு ஒத்த கருத்துடைய உறவினர் தேவை. இதைவிட்டுவிட்டு அவர்கள் செய்த 'தவத்தான் வரும் என்று வள்ளுவர் கூறுவது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. வேண்டாதவரை வெற்றிகொள் வதற்குத் தவம் எப்படி உதவமுடியும்? தமிழகத்தில் மிகப் பழங்காலந்தொட்டு நிலை பெற்றுவந்த ஒரு கருத்தாகும் இது. நான்குடன் மாண்டதாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புறம்: 55) என்ற புறப்பாடலுக்கு, அரசன் பெறும் வெற்றி அவன் வைத்துள்ள படையைக் கொண்டன்று; அவன்