பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

its ఖీ அச. ஞானசம்பந்தன் கடைப்பிடித்து வாழும் அறத்தையே அடிப்படை யாகக் கொண்டது என்பதே பொருளாகும். இப் பாடலில் வரும் அறநெறி முதற்றே என்பதைத்தான் வள்ளுவரும் தவம் என்ற சொல்லால் குறிப்பிடு கின்றார். தவம் என்ற சொல்லுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் துறவறத்தார் இயற்றும் தவம் என்று பொருள்கொண்ட பரிமேலழகர் இக்குறளுக்குப் பொருள் கூறுவதில் மிகுதியும் அல்லற்படுகிறார். 'தபஸ் என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே தவம்’ என்பதாகும். புறத் துறவுடையார் மேற்கொள்ளும் செயல்களைத் தவம் என்ற சொல்லாமலேயே அன்று முதல் குறிப்பிடுகிறோம். ஆதலின் வள்ளுவர் கூறும் தவம் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வதில் இத்தனை இடர்ப்பாடுகள் தோன்றலாயின. ஆனால் வள்ளுவரும்கூட, தவம் என்ற சொல்லை இல்லறத் தார்துறவறத்தார் ஆகிய இருபாலார்க்கும் உரியதாகப் பயன்படுத்துகிறார். - துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம் (குறள்-263) என்ற குறளில் தவம் என்ற சொல் இல்லறத்தார்க்கும் உரியதாகவே பயன்படுத்தப்ப்டுதலைக் காணலாம். இக்குறளுக்குப் பரிமேலழகர் போன்றோர் கூறும் பொருளைவிட்டுவிட்டு புதிய முறையில் பொருள் காண்பது பொருத்தமுடையதோ எனத்தோன்றுகிறது. "மற்றையவர்கள் என்ற சொல்லுக்கு இல்லறத்தார் என்றே பொருள்கொள்ள வேண்டும். காரணம் முன்னர்த் துறந்தார்க்கு என்ற சொல் வருதலின்