பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 19 "மற்றையவர்கள் என்ற சொல்லுக்கு இல்லறத்தார் என்று பொருள் கூறுவது பொருத்தமுடையதே ஆகும். இல்லறத்தில் வாழ்கின்றவர்களால் உபகரிக்கப் பட வேண்டியவர்களுள் துறவறத்தாரும் ஒரு பகுதி யினர் ஆவர். இவர்களன்றியும் தெய்வம், விருந்து, ஒக்கல் ஆகியோர்க்கும் உரிய உபசரணை செய்தல் வேண்டும். துறவறத்தில் உள்ளவர்களைப் பார்த்து ஏதோ செயற்கரிய செயலைச் செய்துவிட்டவர்கள் என்று எண்ணி வியந்து, அவர்களுக்கு மடம் முதலிய அமைத்து வளமான வசதிகளைச் செய்து தருதல் ஒன்றே தம் தலையாய கடமை என்று நினைக்கும் இல்லறத்தாரைப் பார்த்துக் கூறப்பட்டதாகும் இக்குறள். அதாவது மற்றையவர்கள், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்! தவம்’ என்று கொண்டுசுட்டுச் செய்துகொண்டால் இதன் பொருளை நன்கு விளங்கிக் கொள்ளலாம். இதிலொரு நுணுக்கமும் அமைந்துள்ளது. புறத் துறவுடையவர்கள் தம்மை உபசரிக்கின்ற இல்லறத் தார்மாட்டு எவ்விதத் தொடர்புமில்லாதவர்கள். எனவே அவர்களுக்கு ஒப்புரவு செய்யும்பொழுது விருப்பு வெறுப்பு முதலிய எதுவும் தோன்றுவதில்லை. ஆனால் விருந்தினராக வரும் தம்மையொத்த சக மனிதர்களிடை விருப்பு வெறுப்புத் தோன்றல் இயல்பு. அந்த விருப்பு வெறுப்பை நீக்கி உபசாரம் செய்த லையே விருந்தோம்பல் என்று கூறுகிறோம். விருப்பு வெறுப்பு நீக்கிக் கடமை செய்யப்படுதலின் இதனைத் தவம் என்று கூறுகிறோம். விருந்துக்குக் கூறிய இந்த இலக்கணம் ஒக்கலுக்கும் பொருந்தும். இன்னும் கூறப்