பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இ. அ.ச. ஞானசம்பந்தன் காட்டிற் சென்று துறவு பூண்டு தவம் செய்பவர்கள் ஏதோ உயர்ந்தவர்கள் என்றும் இல்லறத்தார் ஆகிய இவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்றும் பலர் கருதிய காலத்தில் மிக மென்மையாக அதனைச் சாடுகிறார் வள்ளுவர். இங்கேயும் செம்மையான முறையில் கடமையாற்றும் இல்லறத்தாரைத் தவஞ்செய்வார் என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். இக்கருத்தைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் இம்பர் மனைத்தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் (பெ.பு: திருநாவு: 34 என்று கூறுவதால் வள்ளுவரின் உள்ளப்பாங்கைச் சேக்கிழார் அறிந்து உரிய இடத்தில் பயன்படுத்துகிறார் என்பதை அறியமுடிகிறது. சந்நியாசம் என்று வடநூலார் பெரிதுபடுத்திப் புகழும் புறத்துறவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பரிமேலழகர் இவைபோன்ற குறள்களுக்கு அவர்கள் முறையில் பொருள்செய்ததில் வியப்பொன்றுமில்லை. வள்ளுவரைப் பொறுத்தமட்டில் 'அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள்-49) என்று ஏகாரம் தந்து தெளிவாகக் கூறியுள்ளார். ஆதலின் இதுபோன்ற குறள்களுக்குக் கவனமாகப் பொருள் செய்தல் நலம். தவமும் தவமுடையார்க் காகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது (குறள்-262) என்பது மற்றொரு குறளாகும். இக்குறளிலும் தவமும் தவமுடையார்க்காகும் என்ற தொடர் சிந்தனைக் குரியது. இரண்டுமுறை தவம் என்ற சொல் பயன் படுத்தப்பெற்றுள்ளது. தவமுடையார்க்கே தவம் பொருந்தும் என்று கொண்டு முற்பிறப்பில் தவம் செய்தவருக்கே இப்பிறப்பில் தவம் பலிக்கும் என்ற