பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 123 பொருளில் பரிமேலழகர் கூறுவது பொருத்தமாகப் படவில்லை. முற்பிறப்பில் குறிப்பிட்ட அளவு தவஞ் செய்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய முடியும் என்று தவத்தை அளவிட்டு அதுவரை அந்தப் பிறப்பில், அதற்குமேல் இந்தப் பிறப்பில் என்ற முறை யில் பொருள் காண்கிறார் பரிமேலழகர். அப்படி யானால் முதன் முதலில் தவத்தைத் தொடங்கும் ஒரு ஆன்மாவிற்கு அதற்கு முந்தைய தவம் ஏதும் இன்மை யின் யாருமே தவம் தொடங்க முடியாது என்ற பொருள் வந்து நிற்கும். இதுவரை நாம் கண்டுள்ள முறையில் தவம் என்ற சொல்லைச் சிந்தித்தால் துறவறத்தார் தவம் இல்லறத்தார் தவம் என்ற இரண்டும் இக்குறளில் பேசப்பெறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உரிய முறையில் விருப்பு வெறுப்பின்றிக் கடமையை உணர்ந்து இல்வாழ்க்கை நடத்துதலைத் தவம் என்று முன்னர்க் குறிப்பிட்டோ மல்லவா? அத்தவத்தை நன்கு நிறைவேற்றியவர்கட்கு மட்டுமே துறவுநிலைத் தவம் பொருந்திவரும் என்பதே இக் குறளின் பொருளாகும். இல்வாழ்க்கைத் தவம் நன்கு நிறைவேறும்போது ஆசைகள் அறும்; விருப்பு வெறுப்புக்கள் ஒழியும்; இல்லறத்தில் தொடங்கிய அன்பு ஆசைகள் அற்ற நிலையில் அருளாக மலரும்; உயிர்கள்மாட்டு இரக்கம் பிறக்கும். அன்பு பழுத்து அருளாக மாறுவதும் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நீங்குவதும் உயிர்கள்மாட்டு இரக்கம் கொள்வதும் இல்லறத்தவத்தின் முடிந்த பயனாகும். அந்நிலை அடைந்தவர்களுக்கு மட்டுமே