பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இ. அ.ச. ஞானசம்பந்தன் இத்துறவுத் தவம் பொருந்தும் என்க. இன்றேல் புறத் துறவு பூண்டும் பந்த பாசம், ஆசை, விருப்பு வெறுப்பு என்பவற்றுள் சிக்கிப் பசுத்தோல் போர்த்த புலியாக வாழ நேரிடும். இதனையே 'தவமுடையார்க்கே தவம் ஆகும் என்றார். இந்தப் பசுத்தோல் போர்த்த புலிகளை 'அஃதிலார் என்ற தொடரால் குறிப்பிடு கிறார் ஆசிரியர். மனத்திற்கண் மேலே கூறிய மாசுகள் நீங்காது இருப்பவர்கள், புறத்துறவை மேற்கொள்வது அவம்' என்கிறார் ஆசிரியர். அவம் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் கூறும் பயனில் முயற்சி என்ற பொருளோடு கேடு என்ற மற்றொரு பொருளும் உண்டு. கெடு என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது கேடு. இத்தகைய போலித் துறவிகள், பிறர், தம்மை உண்மைத் துறவிகள் என்று நம்பச் செய்வதால் சமுதாயத்திற்குக் கேடு விளைக்கின்றனர் என்ற பொருளும் அவம் என்ற சொல்லில் உள்ளது. ( இக்கட்டுரை 2001இல் பேராசிரியரால் எழுதப்பெற்றது ) 黨 纣