பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் வரலாற்றில் சில நுணுக்கங்கள் தேவாரம் பாடிய மூவர் முதலிகள் வரலாற்றை இன்று நாம் அறிகிறோம் என்றால் அதற்கு முதற் காரணம் சேக்கிழார் பெருமானே ஆவார். ஏனைய காப்பியங்கள் புராணங்கள் என்பவை வரலாறு களைப் பேசும்போது சரித்திர அடிப்படைக்கு அதிக முக்கியம் தருவதில்லை. காப்பியப் புலவர்கள், தம் கற்பனையை நீட்டிவிடுவதால் எது நடந்தது எப்பொழுது நடந்தது என்பவற்றையெல்லாம் நாமறிய வாய்ப்பேயில்லை. காப்பியம் பாடுவதில் சேக்கிழார் சிறந்த வல்லுனராயினும் தாம் எடுத்துக்கொண்ட நாயகர் - கள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தார்கள் என்பதை மறக்கவே யில்லை. அதில் வரும் தலைவர்களுடைய வாழ்க்கை முறையில் புதிய சிந்தனை எதையும் காப்பிய அழகு கருதிச் சேக்கிழார் புகுத்த விரும்பவில்லை. தாம் பாட எடுத்துக்கொண்ட வரலாறுகள் இலக்கிய ஆவணங் serrres (documents) இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தமையின் அவர் காலத்தில் வழங்கிய பல கதைகளைச் சேக்கிழார் எடுத்துக் கொள்ளவேயில்லை. அதே நேரத்தில் சேக்கிழார் காலத்தில் வழங்கிய மிகப் பழைய புராணக் கருத்துக்களைத் தேவைப்படும் இடங்களில் பாடுகிறார். எனவே எந்த ஒரு புராணத்திலும் வெறும் வருணனை, நிகழ்ச்சித் தொகுப்பு என்பவற்றைப்