பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இ அ.ச. ஞானசம்பந்தன் பெரும்பாலும் ஒதுக்கிவிடுகிறார். இந்த அடிப் படையைக் கூறுவதன் நோக்க மொன்று உண்டு. இவருடைய பாடல்களைப் பார்க்கும்போது இதுவரை நம் போன்றவர்களுக்குத் தோன்றாத ஆழ மான நுணுக்கங்கள் பாடலில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிதல் நலம். இதுவரை பெரிய புராணம் பக்தி நூலென்றும் சைவத்தையும் சிவ சின்னங்களை யும் உயர்த்திப் பாடுவதே சேக்கிழாரின் நோக்கம் என்றும் பலர் கருதினர்; கூறியும் வந்துள்ளனர். ஆழ்ந்து நோக்கினால் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லவருகின்ற பாடலில் இடை யிடையே சிந்தனையைத் துரண்டும் சில சொற்களைப் போட்டுக் கதையை நடத்திச் செல்லுகிறார் என்பது புலனாகும். அதிலும் சிறப்பாகத் திருஞானசம்பந்தர் வரலாற்றில் பெரிதும் ஈடுபாடுகொண்ட சேக்கிழார் சாதாரண மனிதர் களின் சிந்தனைக்குத் தட்டுப்படாத சில சொற்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். இந்த வரலாறுகள் பலருக்கும் தெரிந்தவை ஆதலால் வரலாற்று அடிப்படையில் கதைகள் அமைந்த முறையை இங்கே நாம் சிந்திக்கவில்லை. ஒன்றைமட்டும் எடுத்துக்காட்டலாம். சிவபாத விருதயர் குளிக்கச் செல்லும்போது உடன் வருவேன்' என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைத் திருப்திப்படுத்துவதற்காகப் பிள்ளையாரை அழைத்துச் செல்லுகிறார். குழந்தையைக் கரையில் நிற்கவைத்து விட்டுக் குளத்து நீரில் இறங்கி முழுகியவுடன் பிள்ளையார் அழுகிறார். இந்தச் சூழ்நிலையில் மூன்று காரணங்களுக்காகக் குழந்தை அழுதிருக்கலாம். பசி