பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 127 எடுத்ததாலும், தகப்பனார் தண்ணிருக்குள் மூழ்கி யிருக்கிறார் என்பது தெரியாமல் தகப்பனைக் காணோமே என்ற அச்சத்தினாலும், குழந்தைகளுக்கே யுரிய அழுஞ்செயலை மேற்கொண்டும் அழுதிருக் கலாம். இவற்றைக் கூறவந்த சேக்கிழார், தம்மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ செம்மேனி வெண்ணிற்றார் திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா என்று என்று அழைத்தருளி அழுதருள. (பெ. பு: திருஞா 63) என்று பாடுகிறார். சாரும் பிள்ளைமை தானோ என்ற தொடரில் முன்னர்க் காட்டிய மூன்று காரணங்களும் அடங்கிவிடும். குழந்தைகளைப் பொறுத்தமட்டில் இயல்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சியைப் பாடவந்த சேக்கிழார் "தம் மேலைச் சார்பு உணர்ந்தோ என்ற நான்கு சொற்களை இங்குப் பெய்துள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சார்பு என்ற சொல்லுக்குத் தொடர்பு என்பது பொருளாகும். இந்தப் பிறப்பு, இந்த உலகம் இவற்றையெல்லாம் கடந்த ஒரு சார்பு பிள்ளையாருக்கு இருந்தது என்ற கருத்தை மேலைச் சார்பு என்ற தொடரால் சேக்கிழார் குறிப்பிடு கின்றார். மற்றோர் உலகத்தில் இறைவனுடைய திருவடிக் கீழ் சார்பு கொண்டிருந்த தாம், இப்பொழுது அந்தச் சார்பிலிருந்து பிரிக்கப்பட்டு இவ்வுலகிடை வந்ததை நினைந்து அழுதார். இந்த நினைவு, காரண-காரிய அடிப்படையில், அறிவுக்குத் தட்டுப்பட்ட ஒன்றா என்றால் உறுதியாக இல்லையொன்று விடைகூறி விடலாம். தனிப்பட்ட முறையில், அறிவுகொண்டு