பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 129 சேக்கிழார் இவ்வாறு நினைப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு, பிள்ளையார் வளர்ந்த நிலையில் திருத்துருத்தி என்ற ஊரில் பாடிய தேவாரத்தில் இக்கருத்தை, துறக்குமா சொலப் படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமாறு இலாத என்னை மையல்செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டு) இறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. (திரு. 2. 98. 5) என்று தெளிவாக வெளிப்படுத்துகிறார். இந்தத் தேவாரப் பாடல் பிள்ளையார் இந்த உடம்பெடுப்பதற்கு முன்னர் மேலுலகில் அவர் இருந்த நிலையையும் இவ்வுடம்பில் புகவேண்டிய காரணத்தையும் அதனைச் செய்தவர் யார் என்பதை யும் அவர் உணர்ந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. சேக்கிழாரைப் பொறுத்தமட்டில் இதனை மறக்கவே யில்லை. திருந்தடி மறக்குமாறு இலாத தம்மை இந்த உலகிற்குச் செல்லும்படி கட்டளை இட்டவன் அவன் தான் என்று காழிப்பிள்ளையார் கூறுகிறார். மண்ணுலகத்தில் பிறப்பவர்கள் எடுப்பது கர்ம சரீரம் என்று பேசப்பெறும். அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் (கர்மத்திற்கும்) பலன்கள் உண்டு. அது இந்த ஆன்மாவையும் பற்றிநின்று வேறு பிறவிகளிற் செலுத்தும். இந்தக் கொள்கை இறைவன் திருவடியை மறவாது அவன் எதிரேயிருந்து கொண்டிருக்கும் பிள்ளையாருக்கு நினைவிற்கு வந்ததுபோலும். -