பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இ. அ.ச. ஞானசம்பந்தன் கர்மசரீரம் எடுத்தவர்கள்தானே இம்மண் னிடை மனிதர்களாகப் பிறக்கிறார்கள்? இவற்றை யெல்லாம் கடந்து திருவடி சம்பந்தத்துடன் இருந்து வரும் ஒருவரைப்பார்த்து நீ சென்று மண்ணிடைப் பிறப்பாயாக’ என்று இறைவன் ஆணையிட்டால், அதனை ஏற்பது எவ்வளவு கடினம்! அத்தகைய நினைவுகள் பிள்ளையார் மனத்தில் தோன்றா திருக்கவே மையல் செய்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அப்படி இறைவனாகவே ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகத் தம் அணுக்கர் ஒருத்தரை உலகிடைப் பிறக்கச் செய்தாரென்றால் அவர் எடுத்தது கர்மசரீரம் அன்று. எனவே இப் பிறப்பில் பிள்ளையார் செய்த செயல்களின் பயன்கள் அவரைப் பற்றமாட்டா. பிறந்தது போலவே தாம் எதற்காக வந்தாரோ அந்த வேலை முடிந்தவுடன் இச்சரீரத்தை இங்கே எப்படி விடுவது என்பதையும் பிள்ளையார் முன்னரே அறிந்திருந்தார். இதனையே மேலே காட்டிய பாடலின் நான்காவது அடியில் 'இறக்குமாறு காட்டினாய் என்ற தொடரால் குறிப் பிடுகிறார். பிள்ளையாரின் பெரு மாற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது அழுகைதான் என்று சேக்கிழார் அறிந்திருந்தார். அதனைச் சொல்லவந்த நேரத்திலேயே தம் மேலைச் சார்பு உணர்ந்தோ என்ற தொடரைப் புகுத்துவதன் மூலம் மேற்கூறிய கருத்துக்களை விளக்கிவிடுகிறார். சேக்கிழாரை இக் கருத்து வெகு தீவிரமாகப் பற்றி யிருந்தது என்பதை அறிய, ஈசர் கழல் முறை புரிந்த முன்னுணர்வு மூள அழத்தொடங்கினார் (பெ.பு.