பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 131 திரு.ஞா. 6) என்ற தொடரே சான்றாகும். இதனை அடுத்துள்ள பாடலில் சேக்கிழார் உலகியல் முறையில் நின்று இந்நிகழ்ச்சியைப் பார்க்கின்றார். இன்றுகூட உலகத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அழுதால் அனைவரும் மகிழ்ந்து சிரிப்பார்கள். அது அழாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால் எல்லோரும் அழத் தொடங்கிவிடுவர். இக்கருத்தைக் கூறவந்த சேக்கிழார் 'எவ்வுயிரும் குதுகலிப்ப புண்ணியக் கன்று அனை யவர் தாம் பொருமி அழுதருளினார் (பெ.பு. திருஞா. 62) என்று பாடியுள்ளார். இக்குழந்தை அழுதது மூன்றாவது வயதிலாகும். அதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்வது பொருத்தமில்லை. ஆனால் அந்த அழுகை கேட்டோர் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கி யது. அவர்கள், ஒரு மாபெரும் நன்மை தங்களை நோக்கி வருகின்றது என்பதை உணர்ந்தார்கள் என்பதைக் குறிக்கவே குதுகலிப்பு என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். சம்பந்தப்பெருமான் வாழ்க்கை யில் நடந்த இந்நிகழ்ச்சி சேக்கிழார் மனத்திரையில் தோன்றி அதை அவர் காணுமாறு செய்கிறது. அதனாலேயே குதுகலிப்ப' என்ற சொல் பயன் படுத்தப்பெறுகிறது. பிறர்பெறும் குதுகலத்தை நேரே நின்று அனுபவிக்கலாமே தவிரக் கேட்டு அனுபவிக்க முடியாது. இவ்வரலாற்றின் தொடக்கத்தில் பெருமா னுடைய வாழ்க்கையில் எது தலையாய நிகழ்ச்சி என்று சிந்தித்த சேக்கிழாருக்கு அழுதலாகிய செயல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. இந்த அழுதலாகிய