பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV ஞானப் பாலுண்டு சம்பந்தர் உலாத்தொடங்கித் தூரம் செல்லுமுன் ஐயாவுடன் மோணமாச்சு. ஆக, முற்றுறாச் சிந்தனையில் மூன்றாவதாகத் 'திருஞான சம்பந்தர் சிந்தனைகள் நிற்கிறது. திருக்குறட் சிந்தனையோ, பெரியபுராணச் சிந்தனையோ "முற்றுறல் பெற்றிருந்தால்... சமயத் தமிழ் உலகைப் புதுப்பூக்கள் பலவற்றால் அலங்கரிக்கச் செய்திருக்கும். நம்முடைய தவப்பயன் இவ்வளவே என்றாலும் இந்த வழித்தொடரும் ஏனையோர் பலருக்கு, 'முற்றுறாச் சிந்தனையே’ முதல் அடியைப் பிடித்து வைக்கும். இந்த எண்ணத்தில் இவற்றை ஒரு தொகுதியாக்கிக் கங்கை புத்தகத்தார் உங்கள் முன் படைக்கின்றார். எப்போதும், ஐயா, மீள வாசித்துப் படி திருத்தல் செய்துகொள்வார். மீள வாசிக்க இன்றிங்கு ஐயா இல்லை. 'மீளா அடியை உமக்கே என உரைத்து 'நீள நினைந்த படி, 'நெஞ்சக் கனகல் நெகிழ்ந்துருக 'முற்றுறாச் சிந்தனைகள் மூன்றும். உங்கள் காலடியில். •မွီဇ " န္တီစ မံ -