பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இ. அ.ச. ஞானசம்பந்தன் செயல் எத்தனை செயல்களைச் செய்தது என்பதை அடுக்கிப் புனிதவாய் மலர்ந்து அழுதார்' என்று பாடிச்செல்கிறார். பிள்ளையார் அழுததால் வேத நெறி தழைத்தோங்கிற்று; மிகு சைவத் துறை விளங் கிற்று; பூத பரம்பரை மேலும் பொலிவடைந்தது; இதனை ஓங்க', 'விளங்க', 'பொலிய என்ற மூன்று வினையெச்சங்களை அடுக்கி முடிவாக அழுத' என்ற இறந்தகாலப் பெயரெச்சத்தில் முடிக்கின்றார். (பெ.பு. திரு.ஞா. ) இனி, அடுத்தபடியாகப் பிள்ளையார் வரலாற் றில் கண்டு சிந்திக்கவேண்டிய பல நிகழ்ச்சிகள் வெகு விரைவாகப் பேசப்பெறுகின்றன. சில நிகழ்ச்சிகளை இவ்விடத்தில் சிந்திப்பது நலம். குழந்தையின் அழுகையைக் கேட்ட இறைவன் இறைவியோடு குழந்தையுள்ள இடத்திற்கு வந்து, அனைத்துயிர்க்கும் தாயாக உள்ள ஒருத்தியைப் பார்த்து, பொழிகின்ற உன் திருமுலைப் பால் அடிசில் பொன்வள்ளத்து ஊட்டு (பெ. பு, திரு.ஞா - 65) என்று மட்டும்தானே ஆணையிட்டான்? ஆனால் அன்னை என்ன செய்தாள்? இறைவன் ஆணைப்படி பொற் கிண்ணத்தில் தன்மாட்டுச் சுரக்கின்ற பாலை நிரப்பினாள். அடுத்து ஊட்டு என்று மட்டும்தான் இறைவன் ஆணையிட்டான். ஆனால் அன்னையார் செய்தது என்ன ? அந்தக் கறந்த பாலே எல்லா நலங்களையும் தரும் தன்மை உடையதெனினும் ஏனையோர் போலப் பாலைக் குடித்து வளர்ந்து பெரியவனாக ஆகின்ற அளவுக்குக் காத்திருக்க நேரமில்லை. உலகிடை வந்த காரணத்தைக் குழந்தை