பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 133 உடனடியாகத் தொடங்க வேண்டும். அதனை மனத்துட் கொண்ட அன்னை, எல்லோருக்கும் பொதுவாக அன்றி, பிற பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனாகக் கடைசிப் பிறப்பில் செய்யப்படவேண்டிய செயலை இந்தக் குழந்தை யிடமே செய்துவிட்டார். அதாவது, மனோ வாக்கு லயம் கடந்த சிவஞானம் என்ற ஒன்றைப் படைத்த வளே அவள் ஆதலால், கருத்துப் பொருளாகும் இந்தச் சிவஞானத்தைத் தம்முடைய பாலில் கலந்து ஊட்டினாள் என்கிறார் சேக்கிழார். எண்ணரிய சிவஞானத்து இன்.அமுதம் குழைத்தருளி உண்அடிசில் எனஊட்ட உமைஅம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொன் கிண்ணம்அளித்து அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார். (பெ.பு. திருஞா. 68) சாதாரணப் பால் உடலுக்கு உணவாகும். சிவ ஞானம் குழைக்கப்பட்ட பால் உயிருக்கு விருந்தாகும். எனவேதான், குழந்தையை உண்ணச் சொல்லி, குழந்தையினிடம் பேசுகின்ற அன்னையார் இந்த அடிசிலை உண்க என்று கூறி ஊட்டினார் என்கிறார். பிள்ளையாருக்கு அன்னை கொடுத்த பாலில் எல்லாம் அடங்கியிருந்தது. இப்பொழுது அன்னை செய்த காரியம் உடலை உறுதி செய்யும் பாலினைப் போல் அல்லாமல், உயிருக்கு உறுதி செய்யும் சிவஞானம் சேர்ந்தமையால் எதிர்பாராமல் பல செயல்கள் நடைபெற்றன. அன்னை தந்த பாலில்