பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இ. அ.ச. ஞானசம்பந்தன் சிவஞானம் குழைக்கப்பெற்றிருத்தலின் தவம் முதலிய எந்த முயற்சியும் செய்யாத குழந்தையை இறைவன் திருவருள் சென்று சேர்கிறது. இந்தப் பாலை அருந்தியவுடன் அந்தக் குழந்தைக்கு என்ன என்ன நிகழ்ந்தது என்பதை வரிசைப்படுத்திப் பேசுகிறார் சேக்கிழார். சிவன்அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவம்.அதனை அறமாற்றும் பாங்கினில்ஒங் கிய ஞானம் உவமைஇலாக் கலைஞானம் உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார் அந்நிலையில். (பெ.பு. திருஞா. 70) இந்தப் பாடலில் ஞானம் என்ற சொல் நான்கு இடங்களில் பேசப்பெற்றுள்ளது. ஆனால் நான்கு சொற்களும் தம்முள் சிறிதும் பெரிதுமான வேறுபட்ட பொருளை உட்கொண்டு நிற்கின்றன. ஞானம் என்ற சொல்லுக்கும் அறிவினும் மேம்பட்ட பொருள் ஒன்று உண்டு ஆதலால் அதனைக் குறிக்க நான்கு வேறுபட்ட சொற்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பொருளைத் தரக்கூடிய வேறு சொல் இன்மையால், ஞானம் என்ற ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இக்குறையைப் போக்க, ஞானம் என்ற சொல்லோடு வேறுபட்ட பொருள்தரும் அடைச் சொற்களைப் பயன்படுத்தித் தம் கருத்தை வெளிப் படுத்துகிறார். ஞானம்கூட இரண்டு நிலைகளில் பணிபுரிகிறது. இறைவனைப் பற்றிச் சிந்திக்காமல், ஆத்மாவை அறியும் வழியைக் கூட ஞானம் என்றே கூறுகின்றனர். சேக்கிழார் காலத்தில் இந்த மாறுபட்ட