பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 135 சிந்தனை வலுவாக இருந்தமையின் வெறும் சிவஞானம் என்று மட்டும் சொல்லாமல், சிவன் அடியே சிந்திக்கும் என்ற சொற்களைப் பெய்வதன் மூலம் பிள்ளையாரின் ஞானம் எத்தகையது என்பதைக் கூறிவிட்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தச் சிவஞானம் தேடி அடையக் கூடிய ஒன்று அன்று. இறைவனாகப் பார்த்து அருளினாலொழிய இது கிடைக்காது. அன்னையின் திருமுலைப்பால் உண்டதன் முதல் விளைவு சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் பெற்றமையே யாகும. ஞானம் பிறப்பை ஒழிக்குமா? பிறப்பை ஒழிக்க உதவுமா? அபரஞானம் என்பது உலகியல்பற்றிய ஞானமாகும். பரஞானம் என்பது கடந்து நிற்கும் பொருளைப்பற்றிய ஞானமாகும். இதில் எது பிறப்பை ஒழிக்கும் : கலை ஞானம் எந்த நிலையிலும் பிறப்பைப் போக்கப் பயன்படாது. பரஞானம் இதனை நேரிடையாகச் செய்வதில்லை. ஞான வளர்ச்சி முறையில் அபரஞானத்தில் தொடங்கிப் பரஞானம் முதிர்கின்ற நிலையில் இதே ஞானம் பிறப்பைப் போக்கப் பயன்படுகிறது. எனவே சேக்கிழார் பவம் அதனை அறமாற்றும் என்று கூறியதன் நோக்கமென்ன? பவம் அதனை மாற்றும் என்று கூறியிருந்தால் போதுமே! என்றால் பவம் (பிறப்பை) மாற்றும் என்று கூறினால் ஒரு தரத்தில் குறிப்பிட்ட உடம்புடன் இருக்கும் உயிர் மற்றொரு உடலில் புகுவதையே குறிக்கும். அதிலிருந்து வேறுபடுத்திக் கூறவே அறமாற்றும் என்று கூறுகிறார்.